Reg. No.: _________________
காலாண்டுப் பொதுத்தேர்வு - 2025 (Perambalur District)
பகுதி-1
15 × 1 = 15
உரிய விடையைக் குறியீட்டுடன் தேர்ந்தெடுத்து எழுதுக.
- எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
- காய்ந்த இலையும் காந்த தோகையும் குறிப்பன:
- காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
- கீழ்க்காண்பனவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
- இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர், இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் முறையே:
- "மேகங்கள் மிகவும் கருணையானவை தாகங்கள் தீர்க்கும் போது" - என்று பாடியவர்:
- இரவீந்திரநாத் தாகூர் __________ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை __________ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
- படர்க்கைப் பெயரைக் குறிப்பது எது?
- 'அறிஞருக்கு நூல்', 'அறிஞரது நூல்' - பொருளை வேறுபடுத்தக் காரணம்:
- 'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே:
- பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க:
அ) கொண்டல் - 1) மேற்கு
ஆ) கோடை - 2) தெற்கு
இ) வாடை - 3) கிழக்கு
ஈ) தென்றல் - 4) வடக்கு
பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
கம்பி விதம் பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக்
கட்டிய சூழியu முச்சியு முச்சிக் கதிர்மு த் தொடுமாட
வம்பவளத்திரு மேனியு மாடிட ஆடுக செங்கீரை
ஆதி வயித்திய நாத புரிக்குக னாடுக செங்கீரை
- இப்பாடல் அடிகள் இடம்பெற்ற நூல்:
- இப்பாடலின் ஆசிரியர்:
- 'குண்டலமும் குழைகாதும்' - இலக்கணக்குறிப்பு:
- குகன் என்பது யாரைக் குறிக்கும்?
பகுதி-2 | பிரிவு-1
4 × 2 = 8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 21வது வினா கட்டாய வினா.
- விடைக்கேற்ற வினா அமைக்க:
அ) தொலைக்காட்சி, வானொலி, திரைப்படம், இதழ்கள் போன்ற ஊடகங்கள் மொழிபெயர்ப்பால் வளர்ச்சி பெறுகின்றன.
ஆ) இந்தியாவிற்குத் தேவையான மழை அளவில் எழுபது விழுக்காடு மழையைத் தென்மேற்குப் பருவக் காற்று கொடுக்கிறது. - சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- மென்மையான மேகங்கள் துணிச்சலும் கருணையும் கொண்டு வானில் செய்யும் நிகழ்வுகளை எழுதுக.
- விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்களை எழுதுக.
- "கழிந்த பெரும் கேள்வியினான் எனக் கேட்டு முழுது உணர்ந்த கபிலன் தன் பால் பொழிந்த பெரும் காதல்மிகு கேண்மையினான் இடைக்காட்டுப் புலவன் தென்சொல்"
இவ்வடிகளில் கழிந்த பெரும் கேள்வியினான் யார்? காதல்மிகு கேண்மையினான் யார்? - 'அருமை' எனத்தொடங்கும் குறளை அடிமாறாமல் எழுதுக.
தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன.
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் சர் ஆர்தர் காட்டன்.
இந்திய நீர்ப்பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர் சர் ஆர்தர் காட்டன்.
பிரிவு-2
5 × 2 = 10
ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்கவும்.
- பலகை என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழையாகவும் வேறுபடுத்துக.
- எண்ணுப்பெயர்களைக் கண்டு, தமிழ் எண்களில் எழுதுக:
அ) நாற்றிசையும் செல்லாத நாடில்லை ஆ) ஆனை ஆயிரம் அமரிடை வென்ற. - அமர்ந்தான் - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
- கலைச்சொல் தருக:
அ) Tempest ஆ) Human Resource - சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க:
அ) நாலெழுத்தில் கண் சிமிட்டும். கடையிரண்டில் நீந்திச் செல்லும்.
ஆ) இருக்கும் போது உருவமில்லை. இல்லாமல் உயிரினம் இல்லை. - 'எழுது என்றாள்' என்பது விரைவு காரணமாக 'எழுது எழுது என்றாள்' என அடுக்குத் தொடரானது. 'சிரித்துப் பேசினார்' என்பது எவ்வாறு அடுக்குத் தொடராகும்?
- இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க: மலை - மாலை.
பகுதி 3 | பிரிவு 1
2 × 3 = 6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
- 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.' - இது போல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.
- இன்மையிலும் விருந்தோம்பல் குறித்துப் புறநானூற்றுப் பாடல் தரும் செய்தியை எழுதுக.
- பத்தியைப் படித்துப் பதில் தருக:
மொழிபெயர்ப்பு இல்லாவிடில் சில படைப்பாளிகளும் கூட உருவாகியிருக்க முடியாது. ஷேக்ஸ்பியர் இருந்திருக்க முடியாது. கம்பன் இருந்திருக்க முடியாது. (இரவீந்திரநாத தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை) (ஆங்கிலத்தில் அவரே மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல்பரிசு கிடைத்தது.) (மகாகவியான பாரதியின் கவிதைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப் பட்டிருந்தால் உலக அளவில் உயரிய விருதுகளும் ஏற்பும் கிடைத்திருக்கும்.)அ) இரவீந்திரநாத தாகூர் வங்கமொழியில் எழுதிய கவிதை நூல் எது?
ஆ) இரவீந்திரநாத தாகூருக்கு நோபல் பரிசு கிடைத்தது எப்போது?
இ) பாரதியின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தால் எவை கிடைத்திருக்கும்?
பிரிவு-2
2 × 3 = 6
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 34வது வினா கட்டாயவினா.
- தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணமாகப் பாவலரேறு கூறுவன யாவை?
- வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
- அ) 'தென்னன்'-எனத் தொடங்கும் பாவலரேறுவின் பாடலை அடிமாறாமல் எழுதுக.
(அல்லது)ஆ) 'விருந்தினனாக' - எனத்தொடங்கும் காசிக்காண்டம் பாடலை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு-3
2 × 3 = 6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
- "நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள் நச்சு மரம்பழுத் தற்று" - இக் குறளில் பயின்றுவரும் அணியை விளக்குக.
- ஏதேனும் இரு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு எழுதுக.
படம்: இல்லத்திற்கு வெளியே சிறுமி ஒரு நாய் குட்டிக்கு உணவிடும் காட்சி (வினா எண்: 40)
பகுதி-4
5 × 5 = 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
- அ) 'ஒழுக்கமுடைமை' குறித்து வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.
(அல்லது)ஆ) மன்னன், இடைக்காடனார் என்ற புலவருக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்குக.
- அ) 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
(அல்லது)ஆ) நீவிர் சென்ற உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
- காட்சியைக் கண்டு கவினுற எழுதுக. (மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்திற்கான கவிதை எழுதுக).
- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், முல்லை நகர் என்ற முகவரியில் குடியிருக்கும் கிள்ளிவளவனின் மகன் செங்கோலன் ஊர்ப்புற நூலகத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தம்மைச் செங்கோலனாக எண்ணி, கொடுக்கப்பட்டப் படிவத்தை நிரப்புக.
- அ) பள்ளியிலும் வீட்டிலும் உங்கள் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்பதை எழுதுக.
(அல்லது)ஆ) மொழி பெயர்க்க:
Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages ie both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.
பகுதி-5
3 × 8 = 24
கீழ்கண்ட வினாக்களுக்கு விரிவாக விடையளிக்கவும்.
- அ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
(அல்லது)ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரிக்க.
- அ) "கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே" என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம் அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
(அல்லது)ஆ) 'புயலிலே ஒரு தோணி' யில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
- அ) குமரிக் கடல் முனையையும் வேங்கடமலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு பிள்ளைத்தமிழ் பேசி, சதகம் சமைத்து பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை பாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக் கொண்டு 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
(அல்லது)ஆ) பள்ளி ஆண்டு விழா மலருக்காக, நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/சிறுகதை/கவிதை நூலுக்கு மதிப்புரை எழுதுக.
குறிப்பு: நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் - மொழி நடை - வெளிப்படும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு - சிறப்புக் கூறு - நூலாசிரியர்.