Posts

10th Tamil - Trichy District Quarterly Exam 2025 Question Paper

பதிவெண்:______

காலாண்டுப் பொதுத்தேர்வு - 2025 (Trichy District)

நேரம் : 3.00 மணி
வகுப்பு - 10 | தமிழ்
மதிப்பெண்கள் : 100
பகுதி - I
15 × 1 = 15
1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
  1. 'எந்தமிழ்நா' என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
    அ) எந் + தமிழ் + நா
    ஆ) எந்த + தமிழ் +நா
    இ) எம் + தமிழ் + நா
    ஈ) எந்தம் + தமிழ் + நா
  2. காலில் அணியும் அணிகலனைக் குறிப்பது:
    அ) சுட்டி
    ஆ) கிண்கிணி
    இ) குழை
    ஈ) சூழி
  3. இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர், இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் முறையே:
    அ) அமைச்சர், மன்னன்
    ஆ) அமைச்சர், இறைவன்
    இ) இறைவன், மன்னன்
    ஈ) மன்னன், இறைவன்
  4. 'காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்' - இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது:
    அ) இலையும் சருகும்
    ஆ) தோகையும் சண்டும்
    இ) தாளும் ஓலையும்
    ஈ) சருகும் சண்டும்
  5. ஒவ்வோர் ஆண்டும் உலகக் காற்று நாளாகக் கொண்டாடி வருகிறோம்:
    அ) சூன் 5
    ஆ) சூன் 15
    இ) சூலை 15
    ஈ) ஆகஸ்ட் 15
  6. கீழ்க்காண்பவற்றுள் எந்த இலக்கியம் பிறமொழிப் படைப்பினைத் தழுவித் தமிழில் படைக்கப்பட்டது?
    அ) திருக்குறள்
    ஆ) கம்பராமாயணம்
    இ) கலித்தொகை
    ஈ) சிலப்பதிகாரம்
  7. 'அறிஞருக்கு நூல்', 'அறிஞரது நூல்' ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது:
    அ) வேற்றுமை உருபு
    ஆ) எழுவாய்
    இ) உவம உருபு
    ஈ) உரிச்சொல்
  8. 'நன்மொழி' என்பது:
    அ) பண்பuத்தொகை
    ஆ) உவமைத்தொகை
    இ) அன்மொழித்தொகை
    ஈ) உம்மைத்தொகை
  9. உவப்பின் காரணமாக அஃறிணையை உயர்திணையாகக் கொள்வது:
    அ) இட வழுவமைதி
    ஆ) பால்வழுவமைதி
    இ) திணைவழுவமைதி
    ஈ) கால வழுவமைதி
  10. "நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்" - இத்தொடரைப் படித்து ஏற்ற தலைப்பு இடுக:
    அ) காற்றின் பாடல்
    ஆ) வனத்தின் நடனம்
    இ) மொட்டின் வருகை
    ஈ) நீரின் சிலிர்ப்பு
  11. "பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ" - இவ்வடிகள் இடம் பெற்ற நூல் எது?
    அ) நற்றிணை
    ஆ) குறுந்தொகை
    இ) புறநானூறு
    ஈ) சிறுபாணாற்றுப்படை
  12. பாடல் இடம்பெற்றுள்ள நூல் எது? (பரிபாடல் செய்யுள் பகுதியிலிருந்து வரும் வினா):
    அ) காசிக்காண்டம்
    ஆ) பரிபாடல்
    இ) திருவிளையாடற்புராணம்
    ஈ) மேகம்
  13. 'வளர்வானம்' - இலக்கணக்குறிப்பு தருக:
    அ) பண்புத்தொகை
    ஆ) உவமைத்தொகை
    இ) வினைத்தொகை
    ஈ) உம்மைத்தொகை
பகுதி - II | பிரிவு - 1
4 × 2 = 8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளி. (வினா எண் 21 - கட்டாய வினா)
  1. விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:
    அ) 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.
    ஆ) காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது.
  2. செங்கீரை ஆடுதலில் எந்தெந்த அணிகலன்கள் சூட்டப்படுவதாக முத்துகுமாரசாமி பிள்ளைத்தமிழ் குறிப்பிடுகிறது?
  3. செல்வம் பெருகுவதும் வறுமை வந்து சேர்வதும் எதனால் என வள்ளுவர் உரைக்கின்றார்?
  4. உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.
  5. மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
  6. 'விடல்' என முடியும் திருக்குறளை அடிமாறாமல் எழுதுக.
பிரிவு - 2
5 × 2 = 10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி.
  1. சொற்களை இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக:
    தேன், விளக்கு, மழை, மணி, விலங்கு, செய், மேகலை, வான், பொன், பூ
  2. 'தணிந்தது' - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
  3. பழமொழிகளை நிறைவு செய்க:
    அ) ஒரு பானை _______________
    ஆ) விருந்தும் _______________
  4. கலைச்சொற்களைத் தமிழாக்கம் செய்க:
    அ) Baby shower    ஆ) Multi media

    [செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா - கூட்டப் பெயர்களை எழுதுக: அ) புல் ___________]

  5. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:
    அ) விதி - வீதி    ஆ) விடு - வீடு
  6. தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
  7. 'கட்டுரை படித்த' - இச்சொற்களுக்கு இடையில் வேற்றமை உருபைப் பயன்படுத்தித் தொடரை விரித்து எழுதுக.
பகுதி - III | பிரிவு - 1
2 × 3 = 6
எவையேனும் இரண்டனுக்கு சுருக்கமாக விடையளிக்கவும்.
  1. 'தனித்து உண்ணாமை' என்பது தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படையாக அமைந்தது. இப்பண்பு இக்காலத்தில் அடைந்துள்ள மாற்றங்களைப் பட்டியலிடுக.
  2. பலதுறைகளின் வளர்ச்சிக்கு மொழிபெயர்ப்பு எவ்வாறு பயன்படுகிறது?
  3. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
    தமிழர்கள் உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தனர். உண்பவரின் இடப்பக்கம் வாழை இலையின் குறுகலான பகுதியும் வலப்பக்கம் இலையின் விரிந்த பகுதியும் வர வேண்டும். ஏனென்றால் வலது கையால் உணவு உண்ணும் பழக்கமுடையவர்கள் நாம். இலையில் இடது ஓரத்தில் உப்பு, ஊறுகாய், இனிப்பு முதலான அளவில் சிறிய உணவு வகைகளையும் வலது ஓரத்தில் காய்கறி, கீரை, கூட்டு முதலான அளவில் பெரிய உணவு வகைகளையும் நடுவில் சோறும் வைத்து எடுத்துண்ண வசதியாகப் பரிமாறுவார்கள்.
    வினாக்கள்:
    அ) உணவு பரிமாறும் முறையை நன்கு அறிந்திருந்தவர்கள் யார்?
    ஆ) உணவு பரிமாறுவதற்கு வாழையிலையை எவ்வாறு இட வேண்டும்?
பிரிவு - 2
2 × 3 = 5
எவையேனும் இரண்டனுக்குச் சுருக்கமாக விடையளிக்க. (வினா எண் 34 - கட்டாய வினா)
  1. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
  2. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்கு.
  3. அ) 'புண்ணியப்' - எனத் தொடங்கும் திருவிளையாடற் புராணம் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
    (அல்லது)
    ஆ) 'விருந்தினனான' - எனத் தொடங்கும் காசிக்காண்டம் பாடலை அடிபிறழாமல் எழுதுக.
பிரிவு - 3
2 × 3 = 6
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடையளிக்க.
  1. "மார்கழித் திங்கள் அதிகாலை நேரத்தில் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டனர். சிலர் மிதிவண்டியில் சென்றனர். சாலை ஓரத்தில் இருந்த வீட்டின் மதிலை ஒட்டிச் செங்காந்தள் மலர்கள் பூத்துக் குலுங்கியபடி இருந்தன. அவற்றைப் பார்த்தபடியே வீடு சென்றேன்." - இப்பதிறயைப் படித்துத் தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து எழுதுக.
  2. "வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு" - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
    (அல்லது)
    எடுத்துக்காட்டு உவமையணியைச் சான்றுடன் விளக்குக.
  3. "நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாள்தொறும் நாடு கெடும்." - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி - IV
5 × 5 = 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
  1. அ) இறைவன் புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக.
    (அல்லது)
    ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.
    ‘கவிஞன் யானோர் காலக் கணிதம் கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்! புவியில் நானோர் புகழுடைத் தெய்வம் பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம் இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில் இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை! ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும் அவனும யானுமே அறிந்தவை; அறிக!’ — கண்ணதாசன்
  2. அ) மாவட்ட அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
    (அல்லது)
    ஆ) உங்கள் கிராமத்திற்கு நூலக வசதி வேண்டி பொது நூலகத்துறை இயக்குநர் அவர்களுக்குக் கடிதம் வரைக.
  3. காட்சியைக் கவிதையாக்குக.
    [படம்: பாடப்புத்தகத்தின் அடிப்படையில் கவினுறு கவிதை எழுதும் பகுதி]
  4. திருவையாறு சேக்கிழார் தெரு 289 ஆம் இலக்க வீட்டில் வசித்து வரும் ஆற்றலரசு - நன்மதி ஆகியோரின் மகள் நற்குணதேவி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து வாள்வீச்சு விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை நற்குணதேவியாகக் கருதி கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.
  5. அ) புதிய புயல் சென்னைக்குத் தென்கிழக்கே 150கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இன்று இரவு சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. - புயலின்போது நாம் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிடுக.
    (அல்லது)
    ஆ) மொழிபெயர்க்க:
    Translation is an art in itself. No one can do that. A Translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages i.e. both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.

    [செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா - பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக: "அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம் 'வாழையிலை விருந்து விழா'வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது..." 1. மினசோட்டா தமிழ்ச்சங்கம் எந்த விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது? 2. எந்த உணவு வகைகளை வாழையிலையில் வைக்கின்றனர்? 3. தமிழர் விருந்தில் இடம் பெறும் சுவைகளைப் பட்டியலிடுக. 4. மினசோட்டா தமிழ்ச்சங்கம் எங்குள்ளது? 5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினைத் தருக.]

பகுதி - V
3 × 8 = 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்க.
  1. அ) காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகளை விவரித்து எழுதுக.
    (அல்லது)
    ஆ) சங்ககாலத் தமிழர்களின் விருந்தோம்பல் பண்பைச் சான்றுகளுடன் விளக்குக.
  2. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?
    (அல்லது)
    ஆ) 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.
  3. அ) 'சான்றோர் வளர்த்த தமிழ்' என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.
    (அல்லது)
    ஆ) நீங்கள் நூலகத்தில் படித்த நூலுக்கான மதிப்புரை எழுதுக.
    குறிப்புகள்: நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் - மொழிநடை - வெளிப்படுத்தும் கருத்து - நூலின் நயம் - நூல் கட்டமைப்பு.

Post a Comment