பதிவு எண்: _________________
காலாண்டுப் பொதுத் தேர்வு - 2025 (Tiruvarur District)
பகுதி-1
15 × 1 = 15
i) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.
- காலக்கணிதம் கவிதையில் இடம்பெற்ற தொடர் எது?
- எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
- வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிப்பது?
- படித்தல் - இலக்கணக்குறிப்பு தருக.
- அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைந்தது?
- நன்மொழி என்பது:
- விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. - இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை:
- திருகுகுறளில் அறத்துப்பாலில் உள்ள அதிகாரம்:
- இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர், இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் முறையே:
- இரவீந்திரநாத் தாகூர் __________ மொழியில் எழுதிய கவிதைத் தொகுப்பான கீதாஞ்சலியை __________ மொழியில் மொழிபெயர்த்த பிறகுதான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது.
- 'நான்' என்பது:
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையில் தோன்றி.
உру அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும்
- பாடல் இடம்பெற்ற நூலைத் தேர்க.
- பாடலில் இடம்பெற்றுள்ள அடிமோனையைத் தேர்க.
- 'ஊழ் ஊழ்' இச்சொல்லின் இலக்கணக் குறிப்புத் தேர்க.
- பாடலின் ஆசிரியரைத் தேர்க.
பகுதி - II | பிரிவு - 1
4 × 2 = 8
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 21வது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்கவும்.
- "மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே! முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!" - இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.
- சொல் வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
- தமிழர்கள் வீசுகின்ற திசையைக் கொண்டு காற்றுக்கு எவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்?
- 'தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைப்பதற்காக வைத்திருந்த திணையை உரலில் இட்டுக் குற்றியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி' என்பது இலக்கியச் செய்தி. விருந்தோம்பலுக்குச் செல்வம் மட்டுமே இன்றியமையாத ஒன்றா? உங்கள் கருத்தைக் குறிப்பிடுக.
- மொழிபெயர்ப்பின் பயன் குறித்து எழுதுக.
- 'பல்லார்' - எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
பிரிவு - 2
5 × 2 = 10
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
- பலகை என்பதைத் தொடர் மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
- எண்ணுப்பெயர்களைக் கண்டுபிடித்துத் தமிழ் எண்களில் எழுதுக:
அ) நாற்றிசையும் செல்லாத நாடில்லை ஆ) ஐந்துசால்பு ஊன்றிய தூண் - வருக - பகுபத உறுப்பிலக்கணம் தருக.
- இணையான தமிழ்ச்சொல் தருக:
அ) Land Breeze ஆ) Culture - இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க:
அ) சிறு - சீறு ஆ) மலை - மாலை - தண்ணீர் குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களைக் கண்டறிந்து விரித்து எழுதுக.
- பழமொழிகளை நிறைவு செய்க:
அ) ஒரு பானை _______________ ஆ) அளவுக்கு _______________
[செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா : விடுபட்ட எழுத்துகளை நிரப்புக : அ) இ-கு (பறவையிடம் இருப்பது) ஆ) அ _ கா (தங்கைக்கு மூத்தவள்)]
பகுதி - III | பிரிவு - 1
2 × 3 = 6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
- 'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது.' - இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைத்து எழுதுக.
- உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசையிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஒட்டியாக நான்... முதலாம் தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு நீர் தன்னைப் பற்றிப் பேசினால் உங்களுடைய கற்பனையில் தலைப்புகள் எழுதுக.
- உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:
விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது. கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணியே வருந்துவதாக இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகிறார். கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.அ) கண்ணகி வருந்தியதற்குக் காரணம் எதுவாக இருந்தது என இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்?
ஆ) உரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு எழுதுக.
பிரிவு - 2
2 × 3 = 6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். வினா எண்: 34-க்குக் கட்டாயமாக விடையளிக்கவும்.
- உயிர்கள் உருவாகி வளர ஏற்ற சூழல் பூமியில் எவை எவையெனப் பரிபாடல் வழி அறிந்தவற்றைக் குறிப்பிடுக.
- வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
- அடிபிறழாமல் எழுதுக:
அ) 'அன்னை மொழியே' எனத் தொடங்கி, 'மண்ணுலகப் பேரரசே!' என முடியும் 'அன்னை மொழியே' பாடல்.(அல்லது)ஆ) 'புண்ணிய புலவீர்...' எனத்தொடங்கும் திருவிளையாடற்புராணம் பாடல்.
பிரிவு - 3
2 × 3 = 6
எவையேனும் இரண்டு வினாக்களுக்கும் மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.
- ஏதேனும் இரண்டு வழுவமைதிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
- "வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் கோலொடு நின்றான் இரவு" - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
- "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" - இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு எழுதுக.
பகுதி - IV
5 × 5 = 25
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
- அ) ஒழுக்கமுடைமை அதிகாரத்தில் கூறிய கருத்துகளை வள்ளுவர் வழி நின்று விளக்குக.
(அல்லது)ஆ) இறைவன், புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விளக்குக.
- அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
(அல்லது)ஆ) மாவட்ட அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
- காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.
[படம்: முகத்தில் புத்தக அலமாரி/பூட்டுகள் போன்ற குறியீட்டு வடிவங்கள் கொண்ட மனித உருவங்களின் கார்ட்டூன் சித்திரம்] - திருவள்ளூர் மாவட்டம், பெரியார் நகர், கபிலன் தெரு, 32-ம் இலக்க வீட்டில் குடியிருக்கும் வளவனின் மகன் அமுதன் மாவட்ட மைய நூலகத்தில் நூலக உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை அமுதனாக எண்ணி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
- அ) Translation is an art in itself. No one can do that. A translator should be neutral and not attached to any language. Specifically, he should be proficient in both the languages ie, both the language and the source language. They should be familiar with the social and cultural conditions of both the languages.
(அல்லது)ஆ) வானொலியில் புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை எழுதுக.
[செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா: உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக: "மேற்கு என்பதற்குப் குடக்கு என்னும் பெயருமுண்டு... வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு..." i) மேற்கிலிருந்து வீசும் காற்று யாது? ii) ஊதைக்காற்று என்று அழைப்பதேன்? iii) மேற்கு என்பதன் மற்றொரு பெயர் யாது? iv) வடக்கு என்பது எத்திசையைக் குறிக்கிறது? v) இப்பகுதிக்கு ஏற்ற தலைப்பு தருக.]
பகுதி - V
3 × 8 = 24
அனைத்து வினாக்களுக்கும் விரிவான விடையளிக்கவும்.
- அ) நாட்டுவளமும் சொல்வளமும் தொடர்புடையது என்பதைப் பாவாணர் வழிநின்று விளக்குக.
(அல்லது)ஆ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பல் குறித்து அழகுற எழுதுக.
- அ) "பிரும்மம்" கதை உணர்த்தும் பிற உயிர்களைத் தம் உயிர்போல் நேசிக்கும் பண்பினை விவரிக்க.
(அல்லது)ஆ) 'கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே' என்கிறது வெற்றிவேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துக்களை விவரிக்க.
- கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றிற்கு கட்டுரை எழுதுக:
அ) சான்றோர் வளர்த்த தமிழ் (அல்லது) ஆ) சாலை விதிகள்